நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2023-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக கல்வி புத்தாக்கக் கண்காட்சியில் கோமதி பத்துமலைக்குத் தங்கப் பதக்கம்

தஞ்சோங் மாலிம் :

சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில்  2023-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக கல்வி புத்தாக்கக் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சி நவம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் புத்தாக்கக் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்விசார் புத்தாக்கங்கள் போட்டியில் இடம்பெற்றன. இதில் மொத்தம் விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என நான்கு பிரிவுகள் இடம்பெற்றன.

மேலும், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், சீனா,  போன்ற பல நாட்டு பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இப்புத்தாக்கக் கண்காட்சியில் மலேசியப் புத்ரா பல்கலைக்கழக, மொழிபெயர்புத்துறை முதுகலை ஆய்வு மாணவி கோமதி பத்துமலை தங்கப் பதக்கம் வென்றார்.

கதைச்சித்திரம் வடிவில் 'கவிதைப் பொழில்' எஸ்.பி.எம் கவிதைத் தொகுப்பை உருவாக்கியதற்காக அவருக்கு இத்தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மாணவி கோமதி இரண்டு மாதங்களாக முழு மூச்சாக எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாடத்திலுள்ள கவிதைத் தொகுப்பினை கதைச்சித்திரமாக வடிவமைத்துள்ளார்.

எஸ்.பி.எம் கவிதைத்தொகுப்பிலுள்ள 12 கவிதைகளையுமே அதன் கருப்பொருளுக்கு ஏற்ப இவர் வடிவமைத்துள்ளார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் இலக்கியப் பாடத்திலுள்ள கவிதையினை கற்றுகொள்ளவும், தமிழ் இலக்கியப் பாட மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இப்புத்தாகம் துணைப்புரியும் என்றும் கோமதி நம்பிக்கை தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset