நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவில் தேவாலயத்தை தாக்கி அழித்த இஸ்ரேல்

கான் யூனிஸ்:  

காஸா சிட்டியில் உள்ள பல ஆண்டுகள் மிகவும் பழைமையான கிரேக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் குண்டு வீசி அழித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 18 கிறிஸ்தவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க சுமார் 500 முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அங்கு தஞ்சம் அடைந்திருந்தனர்.

காஸாவில் சுமார் ஆயிரம் கிறஸ்தவர்கள் உள்ளனர்.

இதனிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணியில் ஐ.நா. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அவசர நிவாரணப் பொருள்களை காஸாவுக்குள் அனுப்ப கடந்த 18ஆம் தேதி இஸ்ரேல் ஒப்புக் கொண்ட பின்பும் இன்னும் மருந்து பொருள்கள் உள்ளே செல்லவில்லை.

இந்நிலையில், இந்த நிவாரணப் பொருள்கள் செல்லும் ராஃபா எல்லையை எகிப்து பகுதியிலிருந்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பார்வையிட்டார்.

அப் பகுதியில் 3,000 நிவாரணப் பொருள்கள் கொண்ட 200 டிரக்குகள் காத்திருக்கின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரணப் பொருள்களை அனுப்ப இஸ்ரேல், எகிப்துக்கு இடையே நிபந்தனையுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாழ்வா, சாவா பிரச்னையில் விரைவில் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்கு சென்றடைய வேண்டியது அவசியம். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset