நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ படத்தின் அதிகாலைக் காட்சியை ரத்து செய்தது முற்றிலும் சரியானதே

அஜித்தின் ஒரு படத்திற்கான வெளியீட்டில் இளம் ரசிகர் ஒருவரின் உயிர் பறிபோனதானது கடந்தகாலம் நமக்கு தந்த எச்சரிக்கை!

சமீபத்தில் லியோ டிரைலரின் போதே ஒரு தியேட்டர் நாசமானது. 

இந்தச் சூழலில் அதிகாலை நான்கு மணி ஷோவுக்கு அனுமதித்தால் நள்ளிரவில் இருந்து திரள்திரளாக வரும் ரசிகர்கள் கூட்டத்தை சமாளிப்பது சவாலானது தான்! 

தமிழகத்தில் லியோ வெளியாகும் திரை அரங்கிலெல்லாம் காவல்துறையை விடியவிடிய பாதுகாப்புக்கு ஈடுபடுத்துவது என்பது இயலாத விசயம் என அரசு வக்கீல் கூறி உள்ளது கவனத்திற்கு உரியது.

பயபக்தியோடு விரதமெல்லாம் இருந்து வருடத்திற்கு ஒரு நாள் வைகுண்ட ஏகாதசிக்கு அதிகாலை மூன்று மணிக்கு பெருமாள் தரிசனம் காண கோவில் சொர்க்க வாசல் திறப்புக்கு தவம் கிடக்கும் பாரம்பரியமான வைணவ பக்தர்களைப் போல, ஒரு நடிகருக்கான ரசிகர்களை தியேட்டர் வாசல் திறப்புக்கு அதிகாலை நிற்க வைத்து, என்ன மாதிரியான ஒரு கலாச்சாரத்தைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இளம் சினிமா ரசிகர்களின் ஆர்வக் கோளாறைக் கொண்டு, கஜானாவை நிரப்பிக் கொள்ளத் துடிக்கும் வணிக வெறியர்களின் எக்ஸ்பிளாய்டேஷனுக்கு நீதிமன்றம் முற்றுபுள்ளி வைத்திருப்பது சரி தான்!

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம், காலம் என்று வரையரை இருக்கிறதல்லவா..? 

சினிமா என்பது நம் வேலை நேரம் போக, நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவும் ஒரு கேளிக்கை! அந்த கேளிக்கையையே வாழ்க்கையின் மிகப் பிரதான குறிக்கோளாக்கிவிடத் துடிக்கின்றனர் வணிகப் பெரும் முதலைகள்!

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset