நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா கடற்கரை பகுதியில் மண்டை ஓடுகள், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன

மலாக்கா :

கடந்த ஞாயிற்றுக்கிழமை, என்கோர் கட்டடத்திற்கு அருகிலுள்ள கடலோர கடற்கரை பகுதியில் மண்டை ஓடுகள், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

மாலை 6.32 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு மூலம் இந்த சம்பவம் குறித்து அவரது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த மலாக்கா மத்திய மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு, புதர்களால் சூழப்பட்ட மணலில் மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் இருப்பதைக் கண்டனர்.

கடற்கரையிலிருந்து 20 மீட்டர் தொலைவில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

முன்னதாக, மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து டிக்டாக் பயன்பாட்டில் 13 -16 வினாடிகள் நீடிக்கும் இரண்டு வீடியோ பதிவுகள் இன்று சமூகம் ஊடகங்களில் வைரலாகின.

மலாக்கா கன்டிஜென்ட் காவல் தலைமையகத்தின் (ஐபிகே) தடயவியல் குழுவின் மேலதிக விசாரணையில் எலும்புக்கு அருகில் மணலில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஒரு ஜீன்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மலாக்கா மத்திய காவல் நிலையத்தின் நிர்வாகப் பகுதியில் காணாமல் போனவர்களின் பட்டியலை ஆய்வு செய்ததன் மூலம் இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அடையாளம் காண தடயவியல் விசாரணைக்காக மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மலாக்கா தெங்கா மருத்துவமனை தடயவியல் துறைக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், உறவினர்களை இழந்தவர்கள் அல்லது சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset