நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் கிண்டல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர் ஸைனாப் இந்தியாவிலிருந்து வெளியேறினார்

ஹைதரபாத்: 

இந்தியாவிற்கு எதிராக பதிவுகளை பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார் என்று கூறி  நடப்பு ICC உலக கோப்பை கிரிகெட் போட்டியில் வர்ணனையாளராக இருந்த பாகிஸ்தான் நாட்டின் வர்ணனையாளர் ஸைனாப் அப்பாஸ் இந்தியாவிலிருந்து வெளியேறினார். 

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலக கோப்பைத் தொடரில் விளையாடும் நிலையில் மூன்று முக்கிய ஆட்டங்களின் நேர்முக  வர்ணனைகளை மேற்கொள்ள அவர் இந்தியாவிற்கு வந்தார். 

இருப்பினும், அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதனால் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறி சென்றார்.

சம்பந்தப்பட்ட வர்ணனையாளர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படவில்லை. மாறாக சில காரணங்களுக்காக அவரே வெளியேறினார் என்று ICC தரப்பு கூறியுள்ளது.

முன்னதாக, ICC MEGA EVENT நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துக்கொள்ளவுள்ளதாக X தளத்தில் தகவல் வெளியிட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்தன.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset