நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ரண்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன்

புது டெல்லி:

மஹாதேவ் சூதாட்ட ஆப் நிறுவனம் பல கோடி ரூபாய் பணமோசடி செய்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாலிவுட் நடிகர் ரண்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டவிரோத சூதாட்ட நிறுவனங்கள் இயங்குவதற்கான இணையதளங்களை மஹாதேவ் சூதாட்ட ஆப்  மேற்கொண்டு வந்ததுள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர் துபாயில் இருந்து இதனை செயல்படுத்தி வந்தனர்.

இந்த ஆப்பில் புதிய பயனர்களைச் சேர்த்து, பினாமி வங்கிக் கணக்குகளின் மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கையில் இந்த நிறுவனம் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் ரண்பீர் கபூர் நடித்து பணம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து  ராய்ப்பூர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு ரண்பீருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

மேலும் 15 பிரபலங்கள் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset