நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

 லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது; ரசிகர்கள்  பெரும் எதிர்பார்ப்பு

சென்னை: 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

அதன் முன்னோட்டமாக இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

லியோ திரைப்படம் தமிழ்ச்சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்துள்ளது. லியோ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.  

லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகவிருப்பதால் எக்ஸ் தளத்தில் லியோ படம் திரெண்டிங்காக உள்ளது. 

லியோ திரைப்படத்தில் நடிகர்கள் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த்,  திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தை செவெந்த் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset