நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாஜகவுடன் கூட்டணி தொடர்பில் அதிமுக இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது

சென்னை: 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற மற்றும் மாவட்ட செயலாளர்களும் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி பதற்ற நிலையில் உள்ளது என்று அண்மை காலமாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மேலும், பேரறிஞர் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனமும் பெரும் கண்டனங்களும் எழுந்துள்ளது. 

இதனால் இன்று நடைபெறும் அதிமுக கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து முக்கிய முடிவு செய்யப்படும் என்று தமிழக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset