நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக கூட்டணியில் தேவகவுடா கட்சி இணைந்தது

புது டெல்லி:

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கர்நாடகத்தைச் சேர்ந்த  மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.

தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்த தேவகவுடாவின் மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி பாஜக கூட்டணியில் இணைந்தார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இது பாஜக கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்று நட்டா தெரிவித்தார்.

பாஜகவின் ரகசிய கூட்டாளியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தற்போது அதிகாரபூர்வமாக கூட்டணியில் இணைந்துள்ளது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset