செய்திகள் மலேசியா
ஹாஜி தஸ்லிம் சுழல் கிண்ணம்: வளர்தமிழ் விழாவின் சாம்பியனாக மகிழம்பு தமிழ்ப்பள்ளி
ஈப்போ:
வடகிந்தா மாவட்டத் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான வளர் தமிழ் விழா போட்டியில் ஒட்டு மொத்த வெற்றியாளராக மகிழம்பூ தமிழ்ப்பள்ளி சாம்பியனாக வென்றது.
இதன் வழி டத்தோ ஹாஜி தஸ்லிம் சுழல் கிண்ணத்தை அப் பள்ளி தட்டிச் சென்றது என்பது குறிப்பித்தக்கது.
இந்தப் போட்டியில் கட்டுரை எழுதும் போட்டி , புதிர் போட்டி, கவிதை ஒப்புவித்தல் , பேச்சுப் போட்டி் மற்றும் கதை சொல்லும் போட்டி ஆகியவை இடம் பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட நாகராணி நகைக் கடை உரிமையாளர் பிரகாஷ் 2500 ரிங்கோட்டை நன்கொடையாக வழங்கி உதவினார்.
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் நிதி உதவி செய்து வருகிறது.பள்ளிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு நிதி விண்ணப்பங்கள் தொடர்ந்து செய்யவேண்டும், கண்டிப்பாக நிதி உதவிகள கிடைக்கும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கலந்துகொண்ட போது கூறினார்.
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தமிழாசிரியர்கள் பங்களிப்பு இருந்தாலும் , தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவுக் கண்டு வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் நிலை கேள்விக் குறியாகி விடும் , ஆகவே அதனை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்யவேண்டும் என்று அவர் வலுயுறுத்தினார்.
இந்நிகழ்வு வட கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற ஏற்பாட்டில் நடைபெற்றது.
இங்கு இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் வடகிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவரும் கம்போங் சீமி தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியருமான ச. ஜெயகுமார் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் தேதி மாநில நிலையிலான போட்டி கிரியான் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தேசிய நிலையிலான போட்டி நவம்பர் மாதம் பினாங்கில் நடைபெறவுள்ளது என்ற தகவலை அவர் கூறினார்.
இங்குள்ள அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற வட கிந்தா அளவிலான வளர்தமிழ் விழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களின விவரங்கள் வருமாறு ;
புதிர் போட்டியில் முதல் நிலையில் தனீஷா புருசோத்மன்( சென் . பிலோமினா தமிழ்ப்பள்ளி), இரண்டாவது நிலையில் பகலவீன்ஜி உதயசந்திரன் ( கிளேபாங் தமிழ்ப்பள்ளி), மூன்றாவது நிலையில் கார்த்திக் பாலசந்திரன்( கிளேபாங் தமிழ்ப்பள்ளி) ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
கவிதை ஒப்பிவித்தல் போட்டியில் முதல் நிலையில் அயிஷ்வர்யா சரவணக் குமார் ( மகிழம்பூ தமிழ்ப்பள்ளி), இரண்டாவது நிலையில் சுருதி கோடீஸ்வரன்( சென். பிளோமினா தமிழ்ப்பள்ளி), மூன்றாவது நிலையில் திவிலியன் நாகராஜன்( அரசினர் தமிழ்ப்பள்ளி) ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் சோலமன் சந்திரன்( மகிழம்பூ தமிழ்ப்பள்ளி), இரண்டாவது நிலையில் சர்விஷினி ராமகிருஷ்ணன்( மகிழம்பூ தமிழ்ப்பள்ளி) , சிவேக்கா மணிமாறன்( சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி) ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
கதைக் கூறுதல் போட்டியில் முதல் நிலையில் ஏசாஸ்ரீ ராமகிருஷ்ணன்( அரசினர் தமிழ்ப்பள்ளி), இரண்டாவது நிலையில் காவியா ரமேஸ் ( தேசா பிஞ்சி் தமிழ்ப்பள்ளி), மூன்றாவது நிலையில் நிவாஷினி தனபாலன் ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
கட்டுரை எழுதுதல் போட்டியில் முதல் நிலையில் தனுஷா சோமுலு( கிளேபாங் தமிழ்ப்பள்ளி), இரண்டாவது நிலையில் ருத்ரா வர்ஷினி விஜயன் (தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி), மூன்றாவது நிலையில் மஹான்யசாய் அருட் செல்வம் (தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி) ஆகியோர் வெற்றிப் பெற்றனர்.
ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2026, 7:47 pm
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும்: ஓன் ஹபிஸ் காசி
May 16, 2026, 5:51 pm
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கோல சிலாங்கூர் கெஅடிலான் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
May 16, 2026, 12:42 pm
ஆசிரியர்களின் பணியை மேலும் வலுப்படுத்த 12 முன்னெடுப்புகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது
May 16, 2026, 12:41 pm
ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்: பிரதமர்
May 16, 2026, 12:40 pm
