நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா, தலைவர்களுக்கு எதிராக அவதூறு; செக்கு சந்திராவுக்கு எதிராக போலிஸ் புகார்: சிவசுப்பிரமணியம்

கோலாலம்பூர் :

மஇகா, அதன் தலைவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் செக்கு சந்திராவுக்கு எதிராக போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

இப்புகார் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது என்று மஇகா ஊடகப் பிரிவு தலைவர் சிவசுப்பிரமணியம் கூறினார்.

செக்கு சந்திரா எனும் சந்திரசேகரன் என்ற ஆடவர் தொடர்ந்து நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக மஇகா, அதன் தலைவர்களுக்கு எதிராக அவர் தொடர்ந்து அவதூறாக  பேசி வருகிறார்.

இது தொடர்பன காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக வருகிறது.

அந்தக் காணொளிகளில் இந்திய சமூகத்தினரிடையே வெறுப்பு, பகைமை, பிளவைத் தூண்டக்கூடிய கூறுகளைக் கொண்டுள்ளது.

ஆக நாட்டில் பொது ஒழுங்கு, சமூக நல்லிணக்கம், நாட்டின் சட்ட அமைப்பின் ஒருமைப்பாடு ஆகியவை தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு போலிசார் உடனடியாக, தொழில்முறையாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசுப்பிரமணியம் கூறினார்.

முன்னதாக செக்கு சந்திராவுக்கு எதிராக சிவசுப்பிரமணியம் நேற்று இரவு செந்தூல் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதே போன்று நாடு முழுவதும் உள்ள மஇகா மாநில, தொகுதி, கிளைத் தலைவர்களும் அவருக்கு எதிராக போலிஸ் புகார் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset