செய்திகள் மலேசியா
காலங்கள் மாறலாம்; ஆனால் ஆசிரியர்கள் நம் மனதில் விதைத்த அறிவு விதை என்றும் அழியாது: டத்தோ சரவணக்குமார்
கோலாலம்பூர்:
காலங்கள் மாறலாம். ஆனால் ஆசிரியர்கள் நம் மனதில் விதைத்த அறிவு விதை என்றும் அழியாது.
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் இதனை கூறினார்.
ஆசிரியர்கள் வெறும் பாடங்களை நடத்துவதில்லை. வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும்.
வெற்றி பெற வேண்டும் என்பதை கற்றுத் தருகிறார்கள்.
ஒரு சிற்பி கல்லுக்குள் இருக்கும் சிலையைக் காண்பது போல, ஒரு ஆசிரியர் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் இருக்கும் திறமையைக் காண்கிறார்.
தோல்வியடையும் போது தோள் கொடுப்பதும், வெற்றியை நோக்கித் தள்ளுவதும் ஆசிரியரின் கரங்களே.
நாம் ஏறிச் செல்லும் ஏணியாகத்தான் நின்ற இடத்திலேயே இருந்து, நம்மை உயரங்களுக்குக் கொண்டு செல்பவர்கள் ஆசிரியர்கள்.
காலங்கள் மாறலாம், ஆனால் ஓர் ஆசிரியர் நம் மனதில் விதைத்த அறிவு விதை என்றும் அழியாது.
நமது வாழ்வின் இருளைப் போக்கி, அறிவென்னும் ஒளியேற்றிய அனைத்து ஆசான்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2026, 7:47 pm
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும்: ஓன் ஹபிஸ் காசி
May 16, 2026, 5:51 pm
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கோல சிலாங்கூர் கெஅடிலான் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
May 16, 2026, 12:42 pm
ஆசிரியர்களின் பணியை மேலும் வலுப்படுத்த 12 முன்னெடுப்புகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது
May 16, 2026, 12:41 pm
ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்: பிரதமர்
May 16, 2026, 12:40 pm
