செய்திகள் மலேசியா
இந்தியர் கலை, கலாச்சார, பாரம்பரிய விழாக்களுக்கும் சிறு தொழில் வணிகர்களின் வெற்றிக்கும் துணை நிற்போம்: டத்தோ சிவக்குமார்
ரவாங்:
இந்தியர் கலை, கலாச்சார, பாரம்பரிய விழாக்களுக்கும் சிறு தொழில் வணிகர்களின் வெற்றிக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
சிலாங்கூர் ஸ்ரீ வித்லாயா ஆர்ட் அகாடமியின் ஏற்பாட்டில் கலை, கலாச்சார இசை விழா இன்று ரவாங் அங்கூன் சிட்டியில் நடைபெற்றது.
ஆசிரியர் வித்யா தலைமையில் இம்மாபெரும் விழா நடைபெற்றது.
குறிப்பாக சிறு தொழில் வணிகர்களும் இங்கு கடைகளை வைத்து வியாபாரங்களை மேற்கொண்டனர்.
இதுபோன்ற விழாக்கள் தான் நமது கலை, கலாச்சார, பாரம்பரியம், இசையை பாதுகாக்க முடியும்.
அதே வேளையில் வியாபாரத்தில் வெற்றி பெற துடிக்கும் சிறு தொழில் வணிகர்களுக்கும் நம்மால் உதவ முடியும்.
ஆனால் பல பிரமுகர்கள் இவ்விழாவிற்கு வருவதாக கூறி கடைசியில் வர முடியாமல் போனதாக கேள்விப்பட்டேன்.
அந்த பிரமுகர்களின் நிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும் இந்தியர் கலை, கலாச்சார, பாரம்பரிய விழாக்களுக்கும் சிறு தொழில் வணிகர்களின் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்.
இந்த ஆதரவு தான் அவர்கள் மேற்கொண்டு சாதிக்க அடித்தளமாக இருக்கும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2026, 7:47 pm
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடும்: ஓன் ஹபிஸ் காசி
May 16, 2026, 5:51 pm
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கோல சிலாங்கூர் கெஅடிலான் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
May 16, 2026, 12:42 pm
ஆசிரியர்களின் பணியை மேலும் வலுப்படுத்த 12 முன்னெடுப்புகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது
May 16, 2026, 12:41 pm
ஆசிரியர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்: பிரதமர்
May 16, 2026, 12:40 pm
