
செய்திகள் கலைகள்
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி; இரசிகர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் பணி தொடங்கியது
சென்னை :
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் செப்டம்பர் 10-ஆம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை இணையத்தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
முன்னேற்பாடுகள் சரியாகச் செய்யப்படாத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் நுழைவுச் சீட்டு எடுத்து நிகழ்ச்சியைக் காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியைக் காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் நுழைவு சீட்டுகளை மின்னஞ்சலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு அதற்குரிய பணத்தைத் திரும்ப தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மின்னஞ்சலில் சுமார் 4000 பேர் பணத்தைத் திருப்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
அதை தொடர்ந்து, ரசிகர்களுக்குப் பணத்தை திருப்பி கொடுக்கும் பணியில் ACTC நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது.
இதனை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm