
செய்திகள் கலைகள்
அவளுடன் நானும் இறந்து விட்டேன் - விஜய் ஆண்டானி உருக்கமான பதிவு
சென்னை :
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தனது மகள் இறந்ததைக் குறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவைப் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில்,
அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு படிப்பவர்களைக் கண்கலங்க வைக்கின்றது. அவருடைய இரசிகர்கள் அவருடைய பதிவைப் பகிர்ந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm