
செய்திகள் இந்தியா
லேண்டர், ரோவரை விழிக்க செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியது
பெங்களுரு:
நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன.
சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும்.
14 நாட்கள் நீடித்த சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அவற்றை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது.
இந்நிலையில், நிலவின் அடுத்த சூரிய உதயம் நாளை வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.
இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையிலிருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அதற்கான பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். லேண்டர், ரோவர் மீண்டும் விழித்து ஆய்வில் ஈடுபடும் பட்சத்தில் நிலவின் தென் துருவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உலகுக்கு இஸ்ரோ மூலமாக கிடைக்கும்.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am