
செய்திகள் இந்தியா
ஏர் ஆசியா விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஆடவர் கைது
பெங்களுரு:
பெங்களூரு விமான நிலையத்தில் ஏர் ஆசியா விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலபுரகியை சேர்ந்த பயணியை போலீசார் கைது செய்தனர்.
கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகாவை சேர்ந்தவர் அனில் குமார். இவர் பெங்களூருவில் இருந்து கோவாவுக்கு விமானம் மூலம் செல்வதற்கு முடிவு செய்தார்.
இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து கடந்த 13ஆம் தேதி காலையில் கோவாவுக்கு புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் இருக்கையை முன்பதிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று அவர் தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது விமானத்தில் இருந்த பணிப்பெணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அவரிடம் ஆபாசமாக பேசி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் இதுகுறித்து விமான நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின்பேரில் அதிகாரிகள், அனில் குமாரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அனில் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விமான நிலைய ஊழியரை தாக்கியதாக மற்றொரு பயணி கைது செய்யப்பட்டார். அதாவது கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர் 44 வயதான கபூர் வலியா.
இவர் குவைத்தில் இருந்து பெங்களூருவுக்கு கடந்த 18ஆம் தேதி வந்தார். விமானத்தை விட்டு இறங்கியவுடன், வழக்கம்போல் பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கபூர் வலியாவை சிறிது நேரம் காத்திருக்குமாறு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். அதில் ஆத்திரமடைந்த கபூர் வலியா, அதிகாரியை அவதூறாக பேசியதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தினார். இதில் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டது. கோலாலம்பூர்
இதையடுத்து கபூர் வலியாவை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am