நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பாஜகவின் தேர்தல் நாடகம்

புது டெல்லி:

மகளிர் இடஒதுக்கீடு எப்போது அமல்படுத்தப்படும்  என்று தெரியாமலேயே அதனை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது தேர்தலுக்காக பாஜக அரசு நடத்தும் நாடகம் என்று காங்கிரஸ் கூறியது.

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸில்  வெளியிட்ட பதிவில், பல்வேறு மாநில, மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு நடத்தி வரும் தேர்தல் நாடகங்களில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகப்பெரியதாக உள்ளது.  

எப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. அமல்படுத்தப்படும் நாள் தெரியாமல் வெறும் தலைப்புச் செய்தியாக மட்டுமே இந்த மசோதா இடம்பெற இருக்கிறது. பெண்களின் நம்பிக்கைக்கு பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், இது காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றி. 2010 மார்ச் மாதத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதா அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மக்களவையில் மட்டுமே நிறைவேற்றப்படாமல் இருந்தது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset