நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

27 ஆண்டுகளாக நிலுவை - மகளிர் இடஒதுக்கீடு: மசோதா எப்போது பலன் கிடைக்கும்?

புது டெல்லி:

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 128ஆவது திருத்த இந்த மசோதா வழிவகுக்கிறது.

27 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் உள்ளது. இந்த மசோதா எப்போது நிறைவேறும், அப்படியே நிறைவேறினால் உடனடியாக பெண்களுக்கு பதவி கிடைக்குமா என்றால் இல்லை. இதற்கு பல்வேறு தடைகற்கள் உள்ளன.

முதலில், மகளிர் இடஒதுக்கீடு சாத்தியமாவதற்கு முன்பு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.

பின்னர் 50 சதவீத சட்டப் பேரவைகளின் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மசோதா சட்டமான பிறகு நடத்தப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலாகும்.
2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

2026ம் ஆண்டுக்கு பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2031இல்தான் இது அமலுக்கு வரும் என்று சட்டநிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர் 15 ஆண்டுகள் இந்த இடஒதுக்கீடு அமலில் இருக்கும்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset