நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது 

சென்னை: 

மனோஜ் பாரதிராஜா இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். அவ்வகையில் மார்கழி திங்கள் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். 

புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது 'மார்கழி திங்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த படம் வருகிற அக்டோபர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset