
செய்திகள் இந்தியா
100 மணி நேரத்துக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் என்கவுன்ட்டர்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் 100 மணி நேரத்துக்கும் மேல் என்கவுன்ட்டர் செய்து சண்டையிட்டு வருகின்றனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த புதன்கிழமை மேற்கொண்ட தீவிர தேடுதல் பணியின்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
வனப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து 100 மணி நேரத்துக்கு மேல் சண்டையிட்டு வருகின்றனர்.
எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கவுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் இணைந்து கூட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் பயங்கரவாதிகளை தற்காக்கும் வகையில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am