செய்திகள் கலைகள்
ஜெய்லருக்கு அடுத்து லோட்டஸ் 5 ஸ்டாரின் மகத்தான வெற்றி வெளியீடு மார்க் ஆண்டனி
பெட்டாலிங்ஜெயா :
ஜெய்லருக்கு அடுத்து லோட்டஸ் 5 ஸ்டாரின் மற்றொரு வெற்றி வெளியீடாக மார்க் ஆண்டனி அமைந்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.
எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ரித்து வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லே உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
குறிப்பாக, மலேசியாவின் பிரபலத் தொழிலதிபரான டத்தோஸ்ரீ ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மார்க் ஆண்டனி டிரெய்லரில் மறைந்த நடிகை சில்க் சுமிதா நடித்திருப்பது போன்ற காட்சிகள் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமை லோட்டஸ் 5 ஸ்டார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர்.
இத்திரைப்படத்தின் முதல் காட்சி பிஜே ஸ்டேட் திரையரங்கில் இன்று காலை திரையிடப்பட்டது.
டத்தோஸ்ரீ ஞானவேல் ராஜா, அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கீதாஞ்சலி, லோட்டஸ் பைஃப் ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கருணாமூர்த்தி உட்பட பல பிரமுகர்கள் இத்திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.
விஷால், எஸ்ஜே சூர்யா கூட்டணியின் மிகப் பெரிய அளப்பறையை ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
ஜெய்லருக்கு அடுத்து லோட்டஸ் 5 ஸ்டார் நிறுவனத்திற்கு மிகப் பெரிய வெற்றியை இத்திரைப்படம் தேடித் தரும் என்பது திண்ணம்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2024, 3:39 pm
பிரபல மலையாள எழுத்தாளர் வாசுதேவன் நாயர் காலமானார்
December 26, 2024, 12:33 pm
உலக செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளர் குகேஷை நேரில் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
December 25, 2024, 1:12 pm
ராவணனாக நடிக்க கன்னட நடிகர் யாஷ்ஷுக்கு ரூ.200 கோடி சம்பளம்
December 25, 2024, 11:10 am
தளபதி 69 படத்தின் முதல் பார்வை ஜனவரி 1ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் முடிவு
December 25, 2024, 10:47 am
சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்
December 22, 2024, 3:30 pm