செய்திகள் தமிழ் தொடர்புகள்
நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு சம்மன்: செப்.12-இல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
சென்னை:
நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், வரும் 12-ஆம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு, அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28-ம் தேதி, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1-ஆம் தேதி ஆஜரானார்.
பின்னர், அன்று இரவு கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான போலீஸார், விஜயலட்சுமியிடம் மதுரவாயல் காவல் நிலையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், சீமான் கட்சியினரும் விஜயலட்சுமி மீது புகார்களை அளித்து வந்தனர்.
விஜயலட்சுமி 7 முறை கட்டாயக் கருகலைப்பு செய்ததாக புகார் தெரிவித்திருந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை அறிய, கடந்த 7-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமானிடம் விசாரணை நடத்த செப். 9-ஆம் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், செப்.12-ம் தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 5:00 pm
"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கும் வேறுபாடு கிடையாது": உதயநிதி ஸ்டாலின்
December 19, 2025, 11:22 am
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு
December 18, 2025, 4:43 pm
மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கான ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு
December 17, 2025, 1:15 pm
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: பள்ளிக்கு நாளை விடுமுறை
December 16, 2025, 11:53 am
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
