நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு

கோலாலம்பூர் :

அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

மலேசிய ரிங்கிட் வியாழன் முடிவில் 4.6755/6795 இலிருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 4.6730/6780 ஆக உயர்ந்துள்ளது.

மூவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமது அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறுகையில், 

அமெரிக்காவின் அண்மையத் தொழிலாளர் சந்தை குறிகாட்டிகள் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதைத் தொடர்ந்து காட்டுகின்றன என்றார்.

ஆரம்ப வேலையின்மை கோரிக்கைகள் முந்தைய வாரத்தின் 229,000 இலிருந்து கடந்த வாரம் 216,000 ஆகக் குறைந்துள்ளது.

அதே சமயம் தற்போதைய உரிமைகோரல்களும் 1.679 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இது ஒருமித்த மதிப்பீடான 1.719 மில்லியனுக்கும் மிகக் குறைவு.

அதன்படி, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வுக்கு எதிராக தனது நிலைப்பாட்டைப் பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அமெரிக்க டாலருக்கு அதிக தேவை இருப்பதால், அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 105,059 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

ஒருவேளை இன்று காலை மலேசிய ரிங்கிட்டின் உயர்வுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்றார். 

முக்கிய நாணயங்களின் குழுவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் பெரும்பாலும் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது.

யூரோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.0093/0136 இலிருந்து 5.0062/0115 ஆக உயர்ந்தது.

பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.8289/8339 இலிருந்து 5.8356/8419 ஆக உயர்வு கண்டுள்ளது. 

ஆனால், ஜப்பானிய யென்க்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.63-இலிருந்து 3.17074/181074/3.67 ஆக குறைந்துள்ளது. 

மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது, மலேசிய ரிங்கிட் ஏற்றம் இறக்கமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ள்து.

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.4270/4305 இலிருந்து 3.4249/42895 ஆக குறைந்துள்ளது. 

இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 305.0/305.4 இலிருந்து 304.8/305.3 ஆகவும் சரிவடைந்துள்ளது. 

உள்ளூர் நாணயம் தாய் பாட்க்கு எதிராக 13.1301/1469 இலிருந்து 13.1378/1571 ஆக உயர்ந்த நிலையில் பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக 8.23/8.24 இல் இருந்து 8.23/8.25 ஆகவும் பலவீனமடைந்துள்ளது. 

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset