நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுன்ட்டவுன் இன்று தொடங்குகிறது

பெங்களூரு : 

சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. 

ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம், செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சூரியனுக்கு விண்கலன் அனுப்பும் திட்டம் இதுவரை இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் இஃது இந்தியாவிற்கே ஒரு புது முயற்சியாகும். 

விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும். ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனைத் தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியைச் (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்தப் புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.

இந்நிலையில், செப்டம்பர் 2-ஆம் தேதி ஏவுவதற்கான 24-மணி நேர கவுண்ட்டவுன் செப்டம்பர் 1 (இன்று), காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset