நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானத்தில் 2 வயது குழந்தைக்கு இதயம் செயலிழப்பு: காப்பாற்றிய 5 மருத்துவர்கள்

புது டெல்லி: 

பெங்களூரிலிருந்து தில்லி சென்ற விஸ்டாரா விமானத்தில் 2 வயது பெண் குழந்தைக்கு திடீர் என இதயம் செயலிழந்தது. விமானத்தில் இருந்த 5 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

பெங்களூரிலிருந்து "விஸ்டாரா' பயணிகள் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புறப்பட்ட 30 நிமிஷத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டது.பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட அக்குழந்தையின் சுவாசம் நின்றுவிட்டதால் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு நாக்பூரில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

பெங்களூரில் நடந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அதே விமானத்தில் தில்லி திரும்பிக் கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் இதயநுரையீரல் புத்துயிர் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிகிச்சை அளிக்கும் போது குழந்தைக்கு நாடித் துடிப்பு இல்லை.  அதீத குளிர்ச்சியால் விரைத்துப் போயிருந்த குழந்தை மூச்சுவிடுவதை நிறுத்தியிருந்தது.

நடுவானில் சிபிஆர் சிகிச்சை தொடங்கப்பட்டது. ஊசி செலுத்த ஏதுவாக ஐ.வி.யை உடனடியாகப் போட்டு, அதில் அவசர உயிர்காப்பு மருந்து ஏற்றப்பட்டது.

ஏஇடி கருவி மூலம் இறுதியாக குழந்தைக்குத் தன்னிச்சையான சுவாச சுழற்சி திரும்பச் செய்து, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது என்றனர்.  

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset