நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தலை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு

புது டெல்லி: 

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த முடிவு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதன் மூலம் நீண்ட நாள்களுக்கு பிறகு ஆயிரத்துக்கு கீழ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பெண்களுக்கான பிரதமர் மோடியின் பரிசு இது என்று பாஜக கூறியுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில், கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி, எதிர்க்கட்சி கூட்டணியின் கடந்த 2 கூட்டங்களின் வெற்றி ஆகியவையே, மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம்.

கர்நாடக பேரவைத் தேர்தலில் சமையல் எரிவாயு விலை உயர்வுதான் எதிரொலித்தது.

ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள் நிகழாண்டும், மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள நிலையில், எல்பிஜி விலையை பிரதமர் மோடி திடீரென குறைத்துள்ளார்.

தோல்வி பயத்தில் உள்ள பாஜக, தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யும் மனநிலையில் உள்ளது. எனவே, பிரதமரிடமிருந்து மேலும் பல தேர்தல் பரிசுகளை எதிர்பார்க்கலாம் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset