நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சந்திரயான்-3 இன்னும் சிறிது நேரத்தில் தரை இறங்கும்: இஸ்ரோ

புதுடெல்லி: 

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்கள், நிலவில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி மனம் உருக பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது. 

இந்திய நேரப்படி மாலை 6 மணி அளவில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, தரையிறக்குவதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு லேண்டர் வருவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நேரப்படி மாலை 5.44 மணிக்கு தரையிறக்கப்பட வேண்டிய இடத்திற்கு லேண்டர் வந்துவிடும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, தானியங்கி முறையில் தரையிறக்குவதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றதும் லேண்டர் தரையிறக்கப்படும் என்று கூறியுள்ளது. 

லேண்டர் தரையிறக்கப்பட்ட உடன் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை சந்திரயான்-3 திட்டத்தின் குழு தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறக்கப்படுவதை மாலை 5.20 மணி முதல் நேரலையில் காணலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset