நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாத்தேக் உடை அணிய வேண்டும்

புத்ராஜெயா: 

அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கட்டாயம் பாத்திக் உடைய அணிய வேண்டும். மற்ற வேலை நாட்களில் பாத்திக் அணிவது ஊக்குவிக்கப்படுகிறது.

பொது சேவை ஊழியர் ஆணையத்தின் தலைமை இயக்குநர் சுல்காப்லி முகமது கையெழுத்திட்ட மத்திய அரசு பணியாளர்கள் பணி நேரத்தில் மலேசிய பாத்தேக் உடைகளை அணிவது குறித்த  சுற்றறிக்கை கடிதத்தின் மூலம் இந்தக் கட்டுப்பாடு நேற்றிலிருந்து அமலுக்கு வந்தது. 

குறிப்பிட்ட ஆடைக் குறியீடு விதிமுறைகளுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு பாத்தேக் அணிவதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1985-ஆம் ஆண்டு முதல் பொது சேவைத்துறை அதிகாரிகளால் பாத்தேக் உடை அணியப்படுகிறது.

மலேசியப் பாத்திக் தொழிற்துறைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் நம் நாட்டின் பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பதை உறுதி செய்வதற்காகவும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாத்தேக் ஆடைகளைக் கட்டாயம் அணிய வேண்டும்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset