நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

நிலவைச் சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ ஹரிகோட்டா:

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகின்றது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்கவுள்ளது.

இந்நிலையில், நிலவைச் சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 153*163 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுற்றுவட்டப்பாதை தற்போது 113*157 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

லேண்டரில் உள்ள 4 இயந்திரங்களில் 2 இயரந்திரங்கள் இயக்கப்பட்டு லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. லேண்டரின் அடுத்த செயல்பாடு ஆகஸ்டு 20-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

லேண்டரை வரும் 23--ஆம் தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset