
செய்திகள் தொழில்நுட்பம்
X-இல் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்
மென்லோ பார்க் :
X தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்நிலையில் தற்போது, X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது.
இதன் காரணமாக டிவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்படவுள்ளது.
நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள்.
அவர்கள் தற்போது இதிலிருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவைப் பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும் என்று X தலைமை செயல் அதிகாரியான யாக்கரினோ தெரிவித்தார்.
இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டிவிட் மூலம் உறுதிப்படுத்தினார். இதில் X யு.ஐ.-இல் வீடியோ காலிங் செய்வதற்கான படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் யு.ஐ. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காலங்காலமாக இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. X தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
தற்போது X தளத்தில் ஆடியோ காலிங் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது.
வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அம்சம் பற்றி X சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm