செய்திகள் தொழில்நுட்பம்
2025 ஆண்டு முதல் சவுதியில் USB Type-C மட்டுமே பயன்படுத்த முடியும்
ஜித்தா:
சவூதி அரேபியாவில் வரும் ஜனவரி 1, 2025 முதல் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்களை தரநிலையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2025 முதல் USB Type-C மட்டுமே தரப்படுத்தப்பட்ட இணைப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தரநிலைகள், அளவியல், தர அமைப்பு, தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் இதனை அறிவித்துள்ளது.
மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தினை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளன.
அதில் நாட்டில் உள்ள இணைப்பிகளைப் பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்றும் கூடுதல் செலவுகளைச் செய்யக்கூடாது என்ற நோக்கில் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தரநிலைகள், அளவியல், தர அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையமானது, மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தினை சமர்ப்பித்தது.
அதில் நாட்டில் உள்ள இணைப்பிகளைப் பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்றும் கூடுதல் செலவுகளைச் செய்யக்கூடாது என்ற நோக்கில் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் கழிவுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் கொள்கைகளை ஆதரிப்பதோடு, உயர்தர தரவு பரிமாற்ற தொழில்நுட்பத்தை வழங்கவும் இது உதவியாக இருக்கும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவானது, ஆண்டுக்கு 2.2 மில்லியன் யூனிட்களுக்கு மேல் மொபைல் ஃபோன்கள், எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜர்கள், கேபிள்களை சார்ஜ் செய்யும் உள்நாட்டு நுகர்வு அளவைக் குறைப்பதற்கும், நாட்டில் உள்ள நுகர்வோரின் செலவினத்தை 170 மில்லியன் ரியாலுக்கும் அதிகமாக சேமிப்பதற்கும் பங்களிக்கும் என கூறப்படுகின்றது.
ஆண்டுதோறும் மின்னணு கழிவுகளை சுமார் 15 டன்கள் குறைப்பதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் நிலைத்தன்மைக்கான நாட்டின் இலக்குகளை அடையவும் இது உதவுகிறது.
ஆதாரம்: Khaleej Times
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm