நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக கூட்டணிக்கு 131 வாக்குகள், இந்தியா கூட்டணிக்கு 102  

புது டெல்லி:

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை காரசார விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன.  இது ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், புதிதாக உருவாகியுள்ள இந்தியா கூட்டணிக்கும் இடையே நடைபெற்ற முதல் தேர்தலாக கருதப்படுகிறது.

காவல் துறை, பொது அறிவிப்பு, நில அதிகாரம் ஆகியவை தவிர, பிற துறைகளின் அதிகாரம் டெல்லி அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.

இந்தச்  சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு மக்களவையி்ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தது மத்திய அரசுக்கு கூடுதல் பலமானது.

விவாதத்துக்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா நிறைவேறியது.

நான்கு தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு எதிராக  தோல்வியடைந்ததால் தில்லியில் பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர பாஜக முற்படுகிறது என்று டெல்லி முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset