நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்; இன்று மக்களவையில் விவாதம் 

புதுடில்லி: 

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன

மேலும், மணிப்பூர் நிலவர்ம குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. தீர்மானத்தை நிறைவேற்ற 270 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் எதிர்கட்சி கூட்டணியில் 142 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset