நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட 4ஆம் ஆண்டு: வீட்டுக் காவலில் அரசியல் தலைவர்கள்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

காவலில் வைக்கபட்ட மெஹபூபா முஃப்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,  ஜம்முகாஷ்மீரில் இயல்பு நிலை நிலவுவதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியது பொய் என்பதை இந்நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset