நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிதாக 33 தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டன: நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று புதிதாக 33 தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இத் தகவலை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், புதிய தொற்றுத் திரள்களில் 21, பணியிடங்களில் கண்டறியப்பட்டவை என்றும், 10 தொற்றுத் திரள்கள் சமூக அளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறை சார்ந்த இடங்களில் இரண்டு தொற்றுத்திரள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜோகூர், சிலாங்கூர், சரவாக், பினாங்கு, கோலாலம்பூர், பேராக், நெகிரி செம்பிலான், திரங்கானு, மலாக்கா, பகாங், கிளந்தான், கெடா ஆகிய மாநிலங்களில் இந்த புதிய தொற்றுத்திரள்கள் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset