நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்களைக் கட்ட மலேசியா திட்டமிட்டுள்ளது: அன்வார்

கோலாலம்பூர்:

காசாவில் பள்ளி, மருத்துவமனை, பள்ளிவாசலைக் கட்ட மலேசியா திட்டமிட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாலஸ்தீனத்தில் காசாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் ஆரம்ப முயற்சியாக மலேசியா இம்மூன்றையும் கட்டவுள்ளது.

மலேசியர்களுக்கும் தனியார் துறையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு மூலம் இந்த புனரமைப்பு மேற்கொள்ளப்படும். 

இது எங்கள் முயற்சி. சமூகம், மக்களின் தியாகம்.

அல்லாஹ் நம்மைப் பாதுகாத்து காசா மற்றும் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வானாக என்று அவர் ஒரு காணொலிப் பதிவில் கூறினார்.

காசா மறுசீரமைப்பு முயற்சியில் ஜப்பானிய, மலேசிய அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும் அடங்கும்.

கிழக்கு ஆசிய திட்டத்தின் மூலம் ஒரு நிதியை நிறுவி இதனைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அன்வார் கூறினார்.

முன்னதாக இஸ்ரேலிய தாக்குதல்களால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட காசாவின் மறுகட்டமைப்புக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset