நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் பெண்களுக்கு எதிரான கொடுமை விடியோவை நீக்க இந்தியா வலியுறுத்தல்

புது டெல்லி:

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி பேரணி நடத்தி பாலியல் கொடுமை செய விடியோவை நீக்குமாறு  ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட விடியோ வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதால் இதை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியோ காட்சியை  நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் தனியாக உத்தரவிட்டுள்ளது.

அந்த விடியோ பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாலும், அத்தகைய விடியோக்களை வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரியது என்பதாலும் அதை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திடம் கூறியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset