நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

I.N.D.I.A. VS NEW INDIA

பெங்களூரு:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணிக்கு "இந்தியா தேசிய உள்ளடக்கிய வளர்ச்சி கூட்டணி என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு போட்டியாக பிரமதர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புதிய இந்தியா N, வளர்ச்சியடைந்த தேசம் D, மக்களின் விருப்பம் A என புதிய விளக்கத்தை அளித்து தொடக்கி உள்ளார்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 26 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்தியா கூட்டணி உதயமானது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.

சிவசேனை (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவதற்காக 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த கூட்டம்  மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூகநீதி, கூட்டாட்சி ஆகியவை அழிக்கப்படுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை எதிர்கொள்ளவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதி பூண்டுள்ளோம்.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது, ஜனநாயக மாண்புகளைச் சீர்குலைப்பதாகும். மணிப்பூர் மாநில வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

நமது நாட்டுக்கு மாற்று அரசியல், சமூக, பொருளாதார செயல்திட்டங்களை வழங்க உறுதி அளிக்கிறோம். அரசு நிர்வாகத்தின் தன்மை மற்றும் போக்கை, ஜனநாயகக் கலந்தாய்வு, பங்காற்று நிர்வாகமாக மாற்றி அமைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் தில்லியில் செய்வாய்க்கிழமை மாலை கூடிய என்டிஏ கூட்டணி கூட்டத்தில் 39 கட்சிகள் பங்கேற்றன.

NDA Meeting HIGHLIGHTS: In Kerala, Left And Congress Are Fighting With Each  Other But In Bengaluru..., Says PM Modi

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் என்டிஏவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். வெளிநாடுகளும் இதைத்தான் நம்புகின்றன.  எதிர்க்கட்சிகள் அரசியல் சுயநலத்தால் கூட்டு சேர்ந்துள்ளன.

1970 முதல் கூட்டணியை வைத்து அரசுகளை அமைக்கவும், கலைக்கவும் காங்கிரஸ் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளின் சந்தர்பவாத கூட்டணியின் கனவு பளிக்காது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset