நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூபாய் - திர்ஹமில் வர்த்தகம் செய்ய இந்தியா - UAE முடிவு

அபுதாபி: 

அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாய் - திர்ஹமில் வர்த்தகம் செய்ய இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் UAE முடிவு செய்துள்ளன. 

UAE அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியபோது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

UAE அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்திய ரிசர்வ் வங்கி - யுஏஇ மத்திய வங்கி இடையே இருநாட்டு கரன்சியில் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் மோடி கூறுகையில், இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையொழுத்தானதில் இருந்து இருநாட்டு வர்த்தகம் 20 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset