நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டன் கணக்கான வெள்ளியை தங்கமாக மாற்றும் குருவாயூர் கோயில்

திருச்சூர்:

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயில் நிர்வாகம் இருப்பில் உள்ள வெள்ளியை தங்கமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளது.

குருவாயூர்  கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் என டன் கணக்கிலான வெள்ளிப் பொருள்கள் உள்ளன.

முதல் கட்டமாக இருப்பில் உள்ள 5 டன்னுக்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருள்களை வெள்ளிக் கட்டிகளாக மாற்றுவதற்கு ஹைதராபாதில் உள்ள மத்திய அரசின் நாணயத் தொழிற்சாலையுடன் குருவாயூர் தேவஸ்வம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன் பின் வெள்ளிக்கட்டிகளை மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய தொழிற்சாலையிடம் அளித்து அவற்றின் எடைக்கு ஏற்ப தங்கக் கட்டிகளாகப் பெற்றுக் கொள்ள குருவாயூர் தேவஸ்வம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். :

குருவாயூர் கோயிலில் இருப்பில் உள்ள வெள்ளிப் பொருள்களில் சுத்த வெள்ளியின் அளவு 60 சதவீதமாகவே இருக்கும். அண்மையில் கோயிலில் இருந்த தங்கப் பொருள்கள் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டன. அவை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு வட்டியாக கோயிலுக்கு ரூ.6 கோடி கிடைத்தது என்றார் அவர்.

குருவாயூர் கோயில் தனது வங்கி இருப்பாக ரூ.1,700 கோடி இருப்பதாகவும் 260 கிலோ தங்கம் இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset