நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் ஹிந்து மைதேயி சமூகத்தினருக்கும் கிறிஸ்தவ குகி சமூகத்துக்கும் இடையே நடக்கும் வன்முறையை கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது 

ஸ்டிராஸ்பர்க்:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் ஸ்டிராஸ்பர்கில்  உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், மணிப்பூர் நிலவரம் குறித்த தீர்மானத்தின் மீது  விவாதம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானத்தில், "மணிப்பூரில் ஹிந்து மைதேயி சமூகத்தினருக்கும் கிறிஸ்தவ குகி சிறுபான்மையின சமூகத்துக்கும் இடையே நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

40,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் சொத்துகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் இடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மணிப்பூர் வன்முறைக்கு, மாநிலத்தில் குறிப்பிட்ட மதச் சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகளின் இன தேசியவாத பிரிவினைக் கொள்கை நடைமுறைப்படுத்துதலின் தாக்கமே காரணம் என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

அங்கு கலவரம் மேலும் தீவிரமடையாமல் தடுக்க இந்திய அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை  ஏற்றுக் கொள்ள முடியாது. இது காலனித்துவ மனநிலையை எடுத்துக் காட்டுகிறது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset