நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் இனக் கலவர விவாதம்: இந்தியா அதிர்ச்சி

புது டெல்லி: 

இரண்டு மாதங்களாக நீடித்து வரும் மணிப்பூரின் இனக் கலவரம்  குறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூ கத்தினர், தங்களுக்கு பழங்கு டியினர் அந்தஸ்து கோரி வரு வதற்கு குகி பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் இனக் கலவரமாக மாறி உள்ளது.

அங்கு வன்முறையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தவறிவிட் டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில், பிரஸ் ஸெல்ஸ் நகரைத் தள மாக கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து கண்டனம் தெரிவித்து தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகி, இது முற்றிலும் இந்தியாவின் உள்விவகாரம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset