நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய குடிமக்களாக இருப்பதில் இந்திய முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்: ‘முஸ்லிம் உலக லீக்’ பொதுச் செயலாளர் ஷேக் முஹம்மது

புதுடெல்லி: 

‘முஸ்லிம் உலக லீக்’ அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் முஹ்ம்மது பின் அப்துல் கரீம் அல்-இசா, 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்தியாவின் வரலாறு, பன்முகத்தன்மையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாக இருந்தபோதிலும் மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை இந்தியா கொண்டுள்ளது. 

"பல்வேறு மதங்கள் இடையிலான புரிதலை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். கூடி வாழ்தலுக்கு ஒட்டுமொத்த உலகுக்கும் சிறந்த முன்மாதிரியாக இந்தியா விளங்க வேண்டும். இந்திய குடிமக்களாக இருப்பதில் இங்குள்ள முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர். தங்களது அரசியலமைப்பு சட்டம் குறித்தும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்” என்றார்.

முன்னதாக அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset