நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுலின் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு

அகமதாபாத்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கிய 2 ஆண்டுகள் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம்  மறுத்துவிட்டது.

ராகுலின் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ராகுல் மீது நாடு முழுவதும் 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2 ஆண்டுகள் தண்டனை விதித்த கீழ் நீதிமன்ற உத்தரவு சட்டப்படி சரியானது. தண்டனைக்கு தடை விதிக்க வேண்டி காரணம் எழவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

 2019இல் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல், "எப்படி அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற பொதுவான துணைப்பெயரைக் கொண்டுள்ளனர்?' என்றார்.

மோடி சமூகத்தினரையே இழிவுபடுத்தியதாக கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், சூரத் விசாரணை நீதிமன்றம் கடந்த மார்ச் 23}ஆம் தேதி ராகுலுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.பி. பதவியை ராகுல் இழந்தார்.  

தண்டனை ரத்து, ஜாமீன் கோரி ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20}ஆம் தேதி ராகுலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தண்டனைக்கு தடை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தாக்கல் செய்ய மனு மீதான விசாரணை முடிவடைந்து கடந்த மே மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி ஹேமந்த் பிரச்சக் வெளிக்கிழமை வெளியிட்ட தீர்ப்பின் விவரம்:

சட்டத்தில் இல்லாத அம்சங்களை குறிப்பிட்டு தண்டனைக்கு தடைக் கோர ராகுல் முயல்கிறார். அளிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்பது சட்டமல்ல; விதிவிலக்கு. அரிய வழக்குகளில் தான் இந்த விதிவிலக்கு பொருந்தும். தகுதி நீக்கம் செய்யப்படுவது எம்பி, எம்எல்ஏக்களுக்கு மட்டுமல்ல. ராகுல் மீது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கு தொடுக்கப்பட்ட பிறகு சாவர்க்கரை அவதூறாக பேசியதற்காக புணே, லக்னௌ நீதிமன்றங்களில் ராகுல் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ராகுலின் தண்டனைக்கு தடை விதிப்பது, அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு செய்யப்படும் அநீதியாகும்.

சட்டப்படி சரியான உத்தரவை விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. ஆகையால், ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது மாவட்ட செஷன்ஸ் நீதிபதி விரைந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset