நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக நிர்வாகி ஒருவரால் சிறுநீர் கழிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞரின் பாதங்களை கழுவினார் ம.பி. முதல்வர்


போபால்:

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் பாதங்களை கழுவி மன்னிப்புக் கோரினார் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்.

தஷ்மத் ராவத் என்ற அந்த இளைஞர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர்.

இதனிடையே, பழங்குடியின இளைஞரை அவமதித்த பிரவேஷ் சுக்லா, பாஜக நிர்வாகியாவார்.

இந்தச் சூழலில், போபாலில் உள்ள தனது இல்லத்துக்கு பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத்தை வியாழக்கிழமை வரவழைத்த முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அவரை நாற்காலியில் அமர வைத்து, அவரது பாதங்களை கழுவினார்.

பின்னர், ராவத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதல்வர், விடியோவை பார்த்து மிகவும் வேதனையடைந்தேன்; நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் செளஹானின் இந்த செயலை நாடகம் என்று விமர்சித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், "பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட பாவங்களை இது போக்கிவிடாது" என்றார்.

மத்திய பிரதேசத்தில் சில மாதங்களில்  பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் முதல்வரின் செயல் நாடகம் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset