நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் குறைகிறது

புது டெல்லி:

பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வந்தே பாரத் ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக, தகவல்கள் தெரிவித்தன.

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத்தில் சில வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

போபால்-இந்தூர் வந்தே பாரத் ரயில் சேவையில் 29 சதவீதமும், மறுமார்க்கத்தில் 21 சதவீதமும் மட்டுமே இருக்கைகள் நிரம்பியுள்ளன.

போபால்-ஜபல்பூர் வந்தே பாரத் ரயிலில் 32 சதவீதம், மறுமார்க்கத்தில் 36 சதவீதம், நாகபுரி-பிலாஸ்பூர் ரயிலில் சராசரியாக 55 சதவீதம் என்ற அளவில்தான் பயணிகள் எண்ணிக்கை உள்ளது.

இதுபோல் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களில் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை 46 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. 24 மாநிலங்களில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset