நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தீஸ்தா சரணடைய குஜராத் நீதிமன்றம் உத்தரவு: உச்சநீதிமன்றம் தடை

அகமதாபாத்:

குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்து சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை சனிக்கிழமை ரத்து செய்த அந்த மாநில உயர்நீதிமன்றம் அவரை உடனடியாக சரணடைய உத்தரவிட்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றவும், அப்போதைய முதல்வரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடியை சிறைக்கு அனுப்பவும் தீஸ்தா முயற்சி மேற்கொண்டார்.  

அவருக்கு ஜாமீன் வழங்கினால் மற்றவர்களும் இதுபோன்று செயல்படுவார்கள் என்று தீஸ்தாவின் ஜாமீன் மறுப்பு உத்தரவில்  நீதிபதி குறிப்பிட்டார்.

குஜராத்தில் 2002இல் கோத்ராவில் நடைபெற்ற மதக் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட 63 பேர் சதி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனு கடந்த ஆண்டு ஜூன் 24 தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்ததாக தீஸ்தா சீதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரை குஜராத் போலீஸôர் கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களுக்கு ஜாமீன் வழங்க அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மறுத்தநிலையில், தீஸ்தாவுக்கு கடந்த செப்டம்பர் 2 தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், தீஸ்தாவின் வழக்கமான ஜாமீன் மனுவை குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிர்சார் தேசாய் சனிக்கிழமை தள்ளுபடி செய்தார். சரணடைய 30 நாள்கள் அவகாசம் கேட்ட தீஸ்தாவின் வழக்குரைஞர் கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிபதி,  உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீஸ்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை முறையிடப்பட்டது.

இதை சிறப்பு விசாரணையாக எடுத்துக் கொண்ட இரு நீதிபதிகள் ஜாமீன் வழங்குவதில் இரு வேறு கருத்து உள்ளதால், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தனர்.

பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset