நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்: மணிப்பூர் முதல்வர் நாடகம்

இம்பால்:

மணிப்பூரில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை பிரேன்சிங் ராஜிநாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் பதவி விலகப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடிகளுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி முதல் மோதல் தொடர்ந்து வருகிறது.

2 மாதங்களாக தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் தற்போதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  வன்முறைக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய என்.பிரேன் சிங் முடிவெடுத்திருப்பதாக வெள்ளிக்கிழமை காலைமுதல் தகவல் பரவியது.

இளைஞர்கள், பெண்கள், பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

முதல்வரின் கிழிந்த ராஜிநாமா கடிதத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆளுநரைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு விரைந்த முதல்வர் பிரேன் சிங்கை தலைமைச் செயலகம் அருகே திரண்டிருந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, ட்விட்டரில் விளக்கமளித்து அவர் வெளியிட்ட பதிவில், "இந்த முக்கியமான தருணத்தில் நான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset