நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்

பெங்களூரு:

இந்திய அரசின் உத் தரவுகளை எதிர்த்துட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் அந்தநிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

2021 பிப்ரவரி 2- முதல் 2022 பிப்ரவரி 28- வரை 1,474 ட்விட்டர் கணக்குகள், 175 ட்விட்டர் பதிவுகள், 256 இணைய தள பகிர்வுகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.  

ட்விட்டர் நிறுவனம் இதனை ஏற்க மறுத்து ஒன்றிய அரசிடம் விளக்கம் மட்டும் அளித்தது.  ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்கு எதிராக கர் நாடக உயர்நீதிமன்றத்தை ட்விட்டர் நிறுவனம் அணுகியது.

இது தொடர்பான வழக்கில்  நீதிபதி கிருஷ்ணா எஸ். தீக்க்ஷித், ட்விட்டரின் மனுவை நிராகரித்து ரூ.50 லட்சம் அபராதமும் விதித்தார்.

அவரது தீர்ப்பில், ட்விட்டரின் மனுக்களில் எவ்வித நியாயமும் இல்லை. ட்விட்டர் கணக்குகளை முடக்குவது, ட்விட்டர் பதிவுகளை நீக் குவது தொடர்பாக ஒன்றிய அரசு முன் வைத்துள்ள வாதங்கள் ஏற்புடையதாக உள்ளன.

முக்கியமாக தேசத் தில் பிரச்னை அதிகரிக்கும் என்ற நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் நிறுவனம் நிரந்தர மாக முடக்கி வைத்ததை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது முழுமை யாக ஏற்புடையது. அதே காரணத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு சுட்டிக் காட்டும்ட்விட்டர்கணக்குகளை முடக்க மறுத்தது ஏற்க முடியாதது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார். இதனை 45 நாள்களுக்குள் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் ரூ.5,000 கூடுதல் அபரா தம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவில் விவசாயிகள் போராட் டம் நடைபெற்றபோது சில ட்விட்டர் கணக்குகளை முடக்க இந்திய அரசு நெருக்கடி அளித்ததாக  முன்னாள் தலைவர் ஜேக் டோர்சே அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

ட்விட்டரின் தற்போதைய தலைவரான எலான் மஸ்க், தான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் என்று அண்மையில் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset